தமிழ்நாடு அஞ்சல் வட்டம் அறிவிப்பில் GDS (Postal Assistant, Sorting Assistant) பணிக்கென காலியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்தவர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பணிக்கு ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அஞ்சல் வேலைவாய்ப்பு:
தற்போது தமிழ்நாடு அஞ்சல் வட்டம், GDS (Postal Assistant, Sorting Assistant) பணிக்கு காலியிடங்கள் இருப்பதால் அதை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 40 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் அளிக்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் GDS பணிக்கு தகுதியுள்ள நபர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 14 /02 /2023 என்ற தேதிக்குள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.