பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில், காலியாக உள்ள Research Assistant பதவிக்கான காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க பயன்பெற விரும்புவோர் கீழே விரிவாக கொடுப்பட்டுள்ள பதிவின் மூலம் கூடுதல் தகவல்களை பெற்று கொள்ளலாம்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழக பணி:
ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Research Assistant பதவிற்கான காலிப்பணியிடத்தை நிரப்பும் பொருட்டு பாண்டிச்சேரி பல்கலைக்கழகமானது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் Research Assistant பதவியில் 1 காலிப்பணியிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் PG Degree / MBA / M.Com/ M.Phil / Phd போன்ற படிப்புகளில் பட்டம் பெற்றிருப்பவர்களே இந்த பணிக்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். இந்நிலையில் இப்பணிக்கு நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.16,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த நிறுவனத்தால் தகுதியான நபர்களாக கருதப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலே கூறிய தகுதிகளை பெற்ற ஆர்வமுள்ள விண்ணப்பதார்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்த பின் charumathipu@pondiuni.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 26.01.2023 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கொடுக்கப்பட்டுள்ள கடைசி நாளுக்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.