National Mineral Development Corporation நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு Medical Officer, Jt. CMO ஆகிய பதவிகளுக்கான 4 காலிப்பணியிடத்தை ஒதுக்கியுள்ளது. மேலும் இந்த பணி குறித்த கூடுதல் விவரங்களை இந்த பதிவில் விரிவாக காணலாம்.
NMDC வேலைவாய்ப்பு விவரங்கள் :
தேசிய கனிம வளர்ச்சிக் கழகமானது தற்போது 2023 ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் Medical Officer (General Medicine), Jt.CMO (கதிரியக்க நிபுணர்) போன்ற பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு தகுதி வாய்ந்த பணியாளர்களால் நிரப்பப்பட உள்ளது. மேலும் Medical Officer பணிக்கு 3 காலிப்பணியிடமும், Jt. CMO பணிக்கு 1 காலிப்பணியிடமும் என நிறுவனத்தில் மொத்தமாக காலியாக உள்ள 4 பணியிடங்களில் தகுதி வாய்ந்த பணியாளர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகபட்சமாக 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
இந்நிலையில் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் MBBS-ல் MD/DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Medical Officer பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மருத்துவத்துறையில் 4 வருட முன் அனுபவமும், Jt. CMO பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ரேடியாலஜி துறையில் 12 வருட முன் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். மேலே கூறிய தகுதிகளை பெற்று தேர்வு செய்யப்படும் Medical Officer பணிக்கு ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரை ஊதியமும், Jt. CMO பணிக்கு ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 வரை ஊதியமும் வழங்கப்படுகிறது.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் நேர்காணல் முறை மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலே கூறிய தகுதிகளை பெற்ற நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, பின்பு தகுந்த ஆவணங்களுடன் 17.02.2023, 20.02.2023, 24.02.2023, 26.02.2023 ஆகிய தேதிகளில் அதிகாரபூர்வ அறிவிப்பும் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.