கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் (TNAU) காலியாக உள்ள Research Associate பதவிக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.மேலும் இப்பதவிக்கென 1 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
TNAU-ன் வேலைவாய்ப்பு விவரங்கள் :
தற்போது காலியாக உள்ள ஒரு காலிப்பணியிடத்தை நிரப்புவதற்காக தமிழ்நாடு அக்ரிகல்சர் யூனிவர்சிட்டி ஆனது(TNAU) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதன் மூலம் Research Associate பணிக்கான காலியிடத்தை நிரப்ப உள்ளது. மேலும் வயது வரம்பு குறித்த கூடுதல் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள நபர்கள் அரசால் அனுமதிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Phd பட்டம் பெற்றிக்கவேண்டும். மேலும் TNAU அமைப்பால் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.49,000 ஊதியமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இப்பணிக்கு நேர்காணல் மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ள மேற்கண்ட தகுதிகள் பெற்ற நபர்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்த பின்பு 09.02.2023 தேதியன்று நடைபெறும் நேர்காணலில் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.