சவுத் ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட்( SECL ) தற்போது, Full Time Advisor பணிக்கு காலியிடங்கள் இருப்பதால் அதை நிரப்பவேண்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது மற்றும் இப்பணிக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
SECL நிறுவன வேலைவாய்ப்பு:
SECL நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, FullTime Advisor பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 60 வயது முதல் 65 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணபிப்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் பாடப்பிரிவில் Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணி சார்ந்த துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் ரூ.37,000/- முதல் ரூ.1,05,000/- வரை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும் FullTime Advisor பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் Personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பிப்ரவரி 4 ஆம் தேதி முடிவதற்குள் அதிகாரபூர்வ தளத்திற்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.