தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (TN TRB) தற்போது காலியாக உள்ள 23 காலிப்பணியிடங்களில் Block Education Officer பதவிக்கான பணியிடங்கள் நிரப்புவது குறித்த வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது TN TRB-ன் வருடாந்திர தேர்வு அட்டவணையின் படி பிப்ரவரி 2023 ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN TRB-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
TN TRB ஆணையத்தின் Block Education Officer பதவிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 23 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது பிப்ரவரி 2023 ல் வெளியாகும் எனவும் அதனால் TN TRB தேர்வு எழுத போகும் நபர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டு இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் BC/MBC/SC/ST பிரிவினைச் சேர்ந்த நபர்கள் 01/07/2022 தேதியின்படி 58 வயதிற்கு மிகாமலும், இதர பிரிவினர் 57 வயதினராகவும் இருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களின் B.A./B.Sc (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், வரலாறு மற்றும் புவியியல்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்நிலையில் இப்பணிக்கு ஆன்லைன் கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள நபர்கள் https://trb.tn.nic.in/ என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.