இந்திய மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி Chief Manager Scale IV & Senior Manager Scale III (Mainstream) போன்ற பதவிகளுக்காக மொத்தம் 250 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு திறமை வாய்ந்த நபர்களை கொண்டு காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
Central Bank of India வேலைவாய்ப்பு விவரங்கள் :
Central Bank of India-வில் தற்போது காலியாக உள்ள 250 காலிப்பணியிடங்களில் Chief Manager Scale IV மற்றும் Senior Manager Scale III (Mainstream) போன்ற பதவிகளுக்கான திறமை வாய்ந்த பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளனர். எனவே ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் Chief Manager Scale IV பணிக்கு 31.12.2022 தேதியின் படி அதிகபட்சமாக 40 வயதுக்குள் இருப்பவர்களும், Senior Manager Scale III (Mainstream) பணிக்கு 31.12.2022 தேதியின் படி அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இந்நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Chief Manager Scale IV பணிக்கு 7 வருட பணி அனுபவமும், Senior Manager Scale III (Mainstream) பணிக்கு 5 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். Central Bank of India வங்கியால் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு Chief Manager Scale IV (Mainstream) பணிக்கு ரூ.76,010 முதல் ரூ.89,890 வரையிலான ஊதியமும், Senior Manager Scale III (Mainstream) பணிக்கு ரூ.63,840 முதல் ரூ.78,230 வரையிலான ஊதியமும் வழங்கப்படும்.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க மேற்கண்ட தகுதிகளை பெற்ற ஆர்வம் உள்ள நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் (SC/ST/PWBD/Women விண்ணப்ப கட்டணம் கிடையாது) ரூ.850+GST விண்ணப்ப கட்டணம் செலுத்தி 27.01.2023 முதல் 11.02.2023 வரை உள்ள தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.