தற்போது INDIA POST ஆணையம் Gramin Dak Sevaks (GDS) பணிக்கென 40,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருப்பதால் அதை நிரப்ப வேண்டி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
INDIA POST வேலைவாய்ப்பு:
INDIA POST ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, Gramin Dak Sevaks (GDS) துறையில் Branch Postmaster(BPM), Assistant Branch Postmaster (ABPM) போன்ற பணிகளுக்கு 40,889 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் மற்றும் உள்ளூர் மொழி தெரிந்து வைத்திருப்பது கட்டாயம்.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 40 வரை இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாத ஊதியம் BPM பணிக்கு ரூ.12,000/- முதல் ரூ.29,380/- வரையும், ABPM பணிக்கு ரூ.10,000/- முதல் ரூ.24,470/- வரையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிகளுக்கு தகுதியுடையவர்கள் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பிப்ரவரி 16ம் தேதிக்குள் எளிமையாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.