மத்திய அரசு நிறுவனமான, பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள 2 பணியிடங்களில், Senior Research Fellow, Controller of Examination போன்ற பதவிகளுக்கு தகுதி பெற்ற நபர்கள் வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
BECIL நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விவரங்கள்:
BECIL நிறுவனமானது Senior Research Fellow, Controller of Examination போன்ற பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்து திறமை வாய்ந்த பணியாளர்களை கொண்டு 2 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. மேலும் Senior Research Fellow பணிக்கு 35 வயதினரும், Controller of Examination பணிக்கு 55 வயதினரும் விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் ஆவார்கள்.
மேலும் Senior Research Fellow பணிக்கு Ayurveda / BAMS / MSc (Ayurveda Medicinal Plants) / M Pharma (Ayurveda) / Post Graduate போன்ற பணி சார்ந்த படிப்புகளில் தேர்ச்சியுடன் கூடிய கணினி அறிவு, பத்திரிக்கைகளை ஆன்லைனில் நிர்வகிக்கும் திறன், ஆங்கில உரையாடல் திறன் போன்றவற்றை பெற்றிருக்க வேண்டும். Controller of Examination பணிக்கு PG Degree-ல் தேர்ச்சியுடன் கூடிய 3 வருட தேர்வு கட்டுப்பாட்டாளராக புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் அனுபவம் பெற்றிக்கவேண்டும். மேலும் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,000 ஊதியமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் திறன் சோதனைகள் / நேர்காணல் / Interaction மூலமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள நபர்கள் 09.02.2023 தேதிக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்த பின்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.