ESIC நிறுவனம் தற்போது, Senior Residents பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு 90 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ESIC நிறுவன வேலைவாய்ப்பு:
ESIC நிறுவனம், Senior Residents பணிக்கென 90 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்க்கு வயது வரம்பு அதிகபட்சம் 40 க்குள் இருக்கவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் MBBS, PG Degree , Diploma ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. பொது பிரிவு விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.300 மற்றும் SC/ST பிரிவினர் ரூ.75 ம் செலுத்த வேண்டும்.
மேலும் இந்த பணிக்கு தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று ஆன்லைன் முறையில் எளிதாக இறுதித் தேதி முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறது.