DRDO நிறுவனம், Junior Research Fellow பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஐந்து காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியுள்ளவர்கள் இறுதிநாளுக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பிப்பவர்களின் கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் போன்ற தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
DRDO நிறுவன வேலைவாய்ப்பு:
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) தற்போது, Junior Research Fellow (JRF) பணிக்கென ஐந்து காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 28 ஆக இருக்க வேண்டும் மற்றும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் B.E, B.Tech அல்லது M.E, M.Tech ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக HRA உதவித்தொகையுடன் சேர்த்து ரூ.31,000/- வழங்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் JRF பணிக்கு தகுதி உள்ள நபர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 17/02/2023 ம் தேதிக்குள் yogi.diber@gov.in மின்னஞ்சல் முகவரிக்கு தகுந்த சான்றிதழ்களுடன் அனுப்பவேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.