ரயில்வே துறையில் சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (DFCCIL) நிறுவனமானது தற்போது Dy. CPM/PM/ Electrical போன்ற பதவிகளுக்கான 1 காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
DFCCIL-ன் வேலைவாய்ப்பு விவரங்கள் :
Dy. CPM/PM/ Electrical பதவிக்கான காலிப்பணியிடத்தை நிரப்புவதற்காக DFCCIL நிறுவனத்தில் இருந்து ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 1 காலிப்பணியிடமானது திறன் வாய்ந்த பணியாளர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளது. மேலும் இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 55 வயதிற்கு உட்பட்டவராக இருப்பது அவசியம்.
இந்நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Level 11 முதல் 14 அளவிலான ஊதியத்தில் மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணியாற்றி இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு DFCCIL நிறுவனத்தால் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Parent pay plus deputation allowance படி ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பிரதிநிதித்துவம் (Deputation) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட தகுதிகளை பெற்ற மற்றும் ஆர்வம் உள்ள நபர்கள் அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் அதிகார அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பெற்று, பூர்த்தி செய்த பின்பு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.