திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் (MSU) தற்போது Technical Assistant, Project Assistant – I, Project Assistant – II போன்ற பதவிகளுக்கான 3 காலிப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப் பட உள்ளது. மேலும் பணி குறித்த கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
MSU வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரங்கள்:
MSU பல்கலைக்கழகத்தில் மத்திய கருவிகளுக்கான, சர்.சிவி.ராமன் மையத்தில் தற்போது Technical Assistant, Project Assistant – I, Project Assistant – II போன்ற பதவிகளுக்காக 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதால் அதை தற்காலிக அடிப்படையில் நிரப்ப, MSU பல்கலைக்கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு 01.07.2023 தேதியின்படி குறைந்தபட்சம் 33 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் உள்ள தளர்வுகளை அதிகாரப்பூர்வ பக்கத்தில் காணவும்.
இந்நிலையில் Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Msc-Physical science /chemical /life science போன்றவற்றில் தேர்ச்சியும் அதிநவீன பகுப்பாய்வு கருவியைக் கையாளுதலிலும், மேலும் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும். Project Assistant – I பணிக்கு B.sc-Physical science / chemical / life science, Project Assistant – II பணிக்கு Diploma in Electrical Engineering போன்ற படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Technical Assistant பணிக்கு மாதம் ரூ.20,000 ஊதியத்தில் 3 வருட கால ஒப்பந்த வேலையும், மீதமுள்ள பணிக்கு ரூ.10,000 ஊதியத்தில் 2 வருட ஒப்பந்த வேலையும் வழங்கப்படுகிறது. மேலும் 33 வயதுக்கு கீழ் உள்ள SC/ST பிரிவினருக்கு 5 வருட ஒப்பந்த கால அளவு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட தகுதிகளை பெற்ற நபர்கள் தேவையான ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 31.01.2023 தேதி அன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.