தற்போது தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம்( NCRTC ) ஆனது, Chief Architect பணிக்கென காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
NCRTC நிறுவன வேலைவாய்ப்பு:
Chief Architect பணிக்கென ஒரு காலியிடம் மட்டும் உள்ளதாக, தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் ( NCRTC ) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 55 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் B.Arch பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது மற்றும் விண்ணப்பிப்பவர்கள் Post Qualification பிரிவில் 20 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.1,20,000/- முதல் ரூ. 2,80,000 வரை அளிக்கப்படும்.
மேலும் Architect பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள், நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 27/02/2023 தேதிக்குள் ஆன்லைன் முறையில் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.