காந்திநகரில் உள்ள NTPC புதுப்பிக்கத்தக்க எரிசக்தி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 1 பணியிடத்தில் Associate position பணிக்காக NTPC நிறுவனம் ஓய்வு பெற்ற நிர்வாகிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
NTPC வேலைவாய்ப்பு விவரங்கள் :
தற்போது காலியாக உள்ள Associate position பதவிக்காக நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பணிக்காக 1 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டு ஓய்வு பெற்ற நிர்வாகிகள் பணியமர்த்தப்படவுள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது அதிகபட்சமாக 63 வயதாக இருக்க வேண்டும்.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் /நிறுவனத்திடமிருந்து (B.E) பொறியியல், இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் அரசு / பொதுத்துறை நிறுவனம் அல்லது புகழ் பெற்ற தனியார் நிறுவனத்தில் 25 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, குஜராத்தி மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் முன்னனுபவம் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் போதிய ஆவணங்களுடன் “Associate Position: NREL Gandhinagar” at amitagiri@ntpc.c என்ற இணையதளத்தின் மூலமாக 30.01.2023 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இப்பணி குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.