இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) கீழ் செயல்பட்டு வரும் தேசிய வைராலஜி நிறுவனத்தில் (NIV) தற்போது Project Scientist ‘C’, Project Multi Tasking staff, Project Data Entry Operator, Project Technician III போன்ற பதவிகளுக்காக 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு முன்னுரிமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
NIV வேலைவாய்ப்பு விவரங்கள்:
தற்போது காலியாக உள்ள Project Scientist ‘C’, Project Multitasking staff, Project Data Entry Operator, Project Technician III போன்ற பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை ICMR – தேசிய வைராலஜி நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 4 காலிப்பணியிடங்கள் தகுந்த பணியாளர்களால் நிரப்பப்பட உள்ளது. மேலும் Project Scientist ‘C’ பணிக்கு 40 வயதினரும், Project Multi Tasking staff பணிக்கு 25 வயதினரும், மீதமுள்ள பணிக்கு 40 வயதினரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் One year DMLT / B.sc / MBBS / MD/MS / DNB / B.Sc Microbiology / B.tech / MS office போன்ற படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18,000 முதல் ரூ.67,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் தேவையான ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் படிவம் பெற்று பூர்த்தி செய்து, 14.02.2023 மற்றும் 15.02.2023 ஆகிய தேதிகளில் நடைபெறும் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.