HDB Financial Services நிறுவனம் தற்போது Gold Loan Executive பணிக்கான காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைவாக இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
HDB நிறுவன வேலைவாய்ப்பு:
தற்போது HDB Financial Services நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், Gold Loan Executive பணிக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பணி சார்ந்த துறையில் குறைந்தது 2 முதல் 4 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் மற்றும் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் Executive பணிக்கு தகுதியுள்ளவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் முறையில் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.