நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் தற்போது Director For Projects பணிக்கு பல காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்ஜினியரிங் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் பணி குறித்த கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
NTPC நிறுவன வேலைவாய்ப்பு:
தற்போது Director For Projects பணிக்கு பல காலியிடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதால் அதை நிரப்ப நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு குறைந்தபட்சம் 45 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் MBA , PGDM முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகள் பணியில் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.2,18,200 வரை அளிக்கப்படும்.
மேலும் Director பணிக்கு தகுதியுள்ளவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 21/02/2023 நாளுக்குள் விரைவாக சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.