பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனத்திலிருந்து Director (Human Resources) பதவிக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை 03.03.2023 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
BSNL ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பு விவரங்கள்:
Director (Human Resources) பதவிக்கு பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்காக BSNL நிறுவனமானது தற்போது தன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிங்களை நிரப்பும் முடிவை எடுத்துள்ளது. இதன் மூலமாக வேலை தேடுபவர்கள் மற்றும் இந்நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக உள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிபவர்களின் வயதானது 45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக வயது வரம்பு குறித்த கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இந்நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் விண்ணப்பதாரர் ஒரு நிறுவனத்தில் மனிதவள/பணியாளர் மேலாண்மை/தொழில்துறை உறவுகள் போன்ற பல்வேறு அம்சங்களில் கடந்த பத்து ஆண்டுகளில் குறைந்த பட்சம் ஐந்து வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கான சம்பளமானது ரூ.144200 முதல் ரூ.218200 வரை வழங்கப்படும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு பின்பு நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பெற்று பூர்த்தி செய்த பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் ஆன்லைனில் 03.03.2023 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இறுதி நாளுக்கு பின் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.