BHEL நிறுவனம் தற்போது Chairman, Managing Director பதவிகளுக்கு காலியிடங்கள் இருப்பதால் அதை நிரப்ப வேண்டி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு முன்னுரிமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இதனை பற்றிய தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
BHEL நிறுவன வேலைவாய்ப்பு:
தற்போது BHEL நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி, Chairman மற்றும் Managing Director ஆகிய பதவிகளுக்கு பல காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 60 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் B.E, MBA, PGDIM, CA மற்றும் Postgraduate முடித்திருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அதிகபட்சம் ரூ.2,24,100 வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இப்பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று ஆன்லைன் மூலம் 21 /02 /2023 தேதிக்குள் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.