தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் துறையில் 40,889 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதுவும் தமிழ்நாட்டில் 3167 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் வேலையின்றி இருக்கும் நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு:
தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் Gramin Dak Sevak கீழ் வரும் Branch Post Master (BPM) மற்றும் Assistant Branch Post Master (ABPM) ஆகிய பணிகளுக்கு தமிழ்நாட்டில் மட்டும் 3167 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 40 ஆக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தது 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் உள்ளூர் மொழியை கண்டிப்பாக எழுத படிக்க தெரிந்து வைத்திருக்க வேண்டும் மற்றும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Branch Post Master(BPM) பணிக்கு ரூ.12,000 முதல் ரூ.14,000 வரையும், Assistant Branch Post Master (ABPM) பணிக்கு ரூ.10,000 முதல் ரூ.12,000 வரையும் மாத ஊதியம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும் GDS பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அவர்களின் கல்வித் தகுதி மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள 16/02/2023 என்ற தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.