மதுரை மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் உள்ள 3 காலிப்பணியிடங்களில் வட்டார இயக்க மேலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் போன்ற பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு விவரங்கள்:
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள 3 காலி இடங்களை நிரப்புவதற்காக வட்டார இயக்க மேலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் போன்ற பெண் விண்ணப்பதாரக்காண பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது அதிகபட்சமாக 35 வயதாக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க இருக்கும் பெண்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு இளங்கலை டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு கணினி இயக்கத்தில் 6 மாதம் MS Office சான்றும், வட்டார இயக்க மேலாளர் பணிக்கு கணினி இயக்கத்தில் 3 மாதம் MS Office சான்றுடன் அல்லது Bsc computer science பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
இந்நிலையில் இப்பணிக்கு எழுத்து தேர்வு மூலமாக தகுதியான பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளனர். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.02.2023 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.