தமிழ்நாடு வனத்துறையில் Project Scientist பணிக்கு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அறிவிப்பில் இப்பணிக்கு உள்ள 2 காலியிடங்களை நிரப்பும் நபர்களின் தகுதிகளை பற்றி விளக்கமாக கூறியுள்ளது. அவை பின்வருமாறு,
வனத்துறை வேலைவாய்ப்பு:
தமிழ்நாடு வனத்துறை, Project Scientist பணிக்கென்று உள்ள இரண்டு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பானது அதிகபட்சம் 40 ஆக இருக்க வேண்டும் மற்றும் ST, SC, Women, BC, MBC பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது தளர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் M.V.Sc, Ph.D தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் பணிக்கென நியமிக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியம் ரூ.70,000/- வரை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Project Scientist பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட தகுதிகளை கொண்டவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து aiwcrte@tn.gov.in என்ற இணையதளத்திற்கு தகுந்த சான்றிதழ்களுடன் நாளைக்குள் விரைந்து அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.