பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் தற்போது Patient Care Coordinator, Technical Assistant, Lab Attendant, Pharmacist பணிகளுக்கென்று உள்ள 24 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
BECIL நிறுவன வேலைவாய்ப்பு:
BECIL நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பில், Patient Care Coordinator, Technical Assistant, Lab Attendant, Pharmacist உள்ளிட்ட பணிகளுக்கு 24 காலியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயதானது பணியை பொறுத்து அதிகபட்சம் 35 மற்றும் 40 ஆக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் பணி வாரியாக Bachelor’s Degree, B.Sc. Degree, M. Sc, Diploma, 12ம் வகுப்பு ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,202/- முதல் ரூ.25,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
BECIL நிறுவன பணிக்கு தகுதியுள்ளவர்கள் நேர்காணல் முறையில் நியமிக்கப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 26/02/2023 என்ற தேதி முடிவதற்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவிக்கப்படுகிறது.