இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் உள்ள NIMS ஆணையத்தில் Scientist B, Scientist C பணிக்கென உள்ள இரண்டு காலி இடங்களை நிரப்புவது குறித்து ஆட்சேர்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பணி குறித்த தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.
NIMS வேலைவாய்ப்பு:
NIMS ஆணையத்தில் Scientist B, Scientist C பணிகளுக்கு இரண்டு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயதானது அதிகபட்சம் 35 மற்றும் 40 ஆக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் BE, B.Tech, Master’s degree ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணிக்கென தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாத ஊதியம் ரூ.51,000/- அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Scientist பணிக்கு தகுதியுடையவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20/02/2023 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.