மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), Veterinary Doctors பணிக்கென காலியாக உள்ள இரண்டு பணியிடங்களை தகுதியான நபர்களை கொண்டு நிரப்பும் பொருட்டு அறிவிப்பு ஒன்றை தற்சமயத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் பணி குறித்த கூடுதல் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
CRPF ஆணைய வேலைவாய்ப்பு:
Veterinary Doctors பணிக்கென்று இரண்டு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக CRPF ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 70 ஆக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Bachelor’s Degree in Veterinary Science and Animal Husbandry படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் இப்பணிக்கென தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் ரூ.75,000/- வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Veterinary Doctors பணிக்கு தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக நியமனம் செய்யப்படுவார்கள். மேலும், பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் 01/03/2023 அன்று நடக்கவிருக்கும் நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்