மத்திய அரசின் Sports Authority Of India ஆணையம், Junior Consultants (Accounts/ Finance) பணிக்கென ஒரே ஒரு காலியிடம் மட்டும் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள நபர்கள் விரைவாக இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
SAI ஆணையத்தின் வேலைவாய்ப்பு:
SAI ஆணையம் Junior Consultants (Accounts/ Finance) பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடத்தை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது அதிகபட்சம் 45 ஆக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரிகளில் PG Diploma Or Master Degree(Finance /Accounts /Commerce) மற்றும் CA/ICMA ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Junior Consultants பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.80,250/- அளிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SAI ஆணையத்தின் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் நியமனம் செய்யப்படுவார்கள். மேற்கண்ட தகுதிகளை கொண்டவர்கள் கீழே வழங்கியுள்ள தளத்தின் மூலமாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 07/03/2023 தேதி முடிவதற்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.