National Technical Research Organisation ஆணையத்தில் Analyst – B பணிக்கென்று 67 காலிப்பணியிடங்கள் இருப்பதாக சமீபத்தில் NTRO அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணி குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
NTRO வேலைவாய்ப்பு:
Analyst – B பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 67 காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து National Technical Research Organisation அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது 56 க்குள் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதேனும் பாடப்பிரிவில் Graduate முடித்திருத்தல் வேண்டும் மற்றும் மூன்று ஆண்டுகள் பணி அனுபவமும், Pay Matrix Level-8 என்ற அளவின் கீழ் ஊதியம் பெற்றவராகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. Analyst – B பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு Pay Matrix Level-10 அளவின் கீழ் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
NTRO வேலைக்கு தகுதியானவர்கள் Deputation அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் NTRO-வின் தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அலுவலக முகவரிக்கு அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.