பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தற்போது Speech Therapist, Technical Assistant (Anesthesiology), OT Technician, Manager, Supervisor, Gas Officer போன்ற பணிகளுக்கு காலியிடங்கள் இருப்பதால் அவ்விடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
BECIL நிறுவன வேலைவாய்ப்பு:
BECIL நிறுவனம் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், Speech Therapist, Technical Assistant (Anesthesiology), OT Technician, Manager, Supervisor, Gas Officer உள்ளிட்ட பணிகளுக்கு ஆறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு எல்லை பணியின் அடிப்படையில் குறைந்தபட்சமாக 21 என்றும், அதிகபட்சமாக 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு, Diploma, BSc, BE ஆகிய பணிக்கு தொடர்புடைய ஒன்றில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் BECIL நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் குறைந்தபட்சம் ரூ.43,900/- முதல் அதிகபட்சம் ரூ.45,300/- வரை அளிக்கப்பட உள்ளதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் BECIL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் 06/03/2023 தேதி முடிவதற்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.