ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Assistant Manager, Executive, Trainee உள்ளிட்ட பணிகளுக்கென காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களை தகுதியான மற்றும் திறமையுள்ள நபர்களை கொண்டு நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரெப்கோ நிறுவன வேலைவாய்ப்பு:
ரெப்கோ நிறுவனம் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், Assistant Manager, Executive, Trainee ஆகிய பணிகளுக்கென்று பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 01/02/2023ம் தேதியின் படி 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அனுமதி பெற்ற கல்விநிலையத்தில் அல்லது கல்லூரிகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். B Com முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் 3 ஆண்டுகள் பணியில் அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மாத ஊதியம் Assistant Manager பணிக்கு ரூ.24,500/-, Executive பணிக்கு ரூ.21,500/-, Trainee பணிக்கு ரூ.12,500/- அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரெப்கோ நிறுவனத்தின் பணிக்கு தகுதியானோர்கள் Personal interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் போதிய ஆவணங்களுடன் 24/02/2023 அன்று தலைமை அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.