NIIST வேலைவாய்ப்பு:
Resident Medical Officer, Junior Stenographer, Staff Car Driver போன்ற பணிக்கென காலியாக உள்ள 6 காலியிடங்களை நிரப்ப NIIST ஆணையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் அதிகபட்ச வயதானது 27 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் கொடுத்துள்ள தளர்வுகளை வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு,12 ஆம் வகுப்பு, MBBS என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிகளுக்கென தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாதம் ரூ.19,900/- முதல் ரூ.1,77,500/- வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
NIIST ஆணையத்தின் பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள் Skill Test, Written Test மற்றும் Personal Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தபால் முறையில் அல்லது ஆன்லைன் முறையில் 27/03/2023 மற்றும் 10/04/2023 தேதிக்குள் விரைவாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.