Sports Authority of India (SAI) ஆனது Junior Consultant, Young Professional பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 04.02.2023 தேதிக்குள் விண்ணப்பிக்கவும். மேலும் இப்பணி தொடர்பான கூடுதல் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
இந்திய விளையாட்டு ஆணையமானது Junior Consultant (Infra) ,Young Professional (General Management), Young Professional (Athlete Relation Manager) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்காக 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சமாக 32 முதல் அதிகபட்சமாக 45 வரை இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Junior consultant பணிக்கு B.E or B.Tech ,UG(any degree ),MBBS or PGDM or LLB or CA or ICWA முடித்திருக்க வேண்டும். இதேபோல் Young professional(General Management) பணிக்கு Degree முடித்தவர்களும் , Young Professional (Athlete Relation Manager) பணிக்கு B.E or B.Tech(Civil) முடித்தவர்களும், விண்ணப்பிக்க தகுதியானவர்களாக தெரிவிக்கப்பட்டுள்ளார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.50,000 முதல் 1,00,000 வரை பதவிக்கேற்ப ஊதியம் வழங்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள தகுதிகளை பெற்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று 04.02.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கீழே இணைக்கப்பட்டு நேரடி Apply Online லிங்க்-ஐ கிளிக் செய்தும் விண்ணப்பிக்கலாம்.