NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023: Neyveli Lignite Corporation Limited (NLC) ஆனது Advisor (Project Engineering) பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28.01.2023 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
நெய்வேலி லிக்னைட் கழகமானது (NLC) Adviser (Project engineer) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்காக 1 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 64 மிகாமல் இருப்பது கட்டாயம். வயது வரம்பு தளர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் B.E (mechanical Engineering) படிப்பில் பட்டம் பெற்றிக்கவேண்டும் .விண்ணப்பதாரர்கள். விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு ஊதியம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் .
Advisor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Resume ,வயதுச் சான்று (மெட்ரிகுலேஷன் சான்றிதழ்), கடைசியாக பணிபுரிந்த நிறுவனத்திடமிருந்து Relieving Orderன் நகல், தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் கடைசியாக வரையப்பட்ட ஊதியச்சீட்டு ஆகிய ஆவணங்களின் நகல்களை இணைத்து 28.01.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேதிக்கு பின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளபடாது.