அண்ணா பல்கலைக்கழகம் தற்போது Professional Assistant காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டி வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியுள்ள நபர்கள் இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழக வேலை:
அண்ணா பல்கலைக்கழக வெளியிட்ட அறிக்கையில் Professional Assistant -I , Professional Assistant – II பணிகளுக்கு என இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.E /B.Tech , M.C.A/M.B.A / M.Sc பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
மேலும் நாளொன்றுக்கு Professional Assistent -I பணிக்கு ரூ 821 மற்றும் Professional Assistent -II பணிக்கு ரூ 771 ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் நபர்கள் 30/01/’2023 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
அலுவலக முகவரி:
Dean,
அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி ,
அண்ணா பல்கலைக்கழகம் ,
சென்னை -600 025