National Payments Corporation of India (NPCI) ஆனது IT Recruiter – Off Roll பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 24.01.2023 தேதிக்குள் விண்ணப்பிக்கவும். மேலும் இப்பணி தொடர்பான கூடுதல் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள் :
இந்திய தேசிய கொடுப்பனவு கழகமானது IT Recruiter – Off Roll பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று காணவும்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிந்தால் போதுமானது.மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 2 முதல் 6 ஆண்டுகள் வரை முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள தகுதிகளை பெற்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் 24.01.2023 அன்று நேர்காணலுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.கூடுதல் தகவல்களை பெறுவதற்கு அதிகாரபூர்வ பக்கத்தைப் பார்வையிடவும்.