Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research நிறுவனத்தில் தற்போது Senior Financial Advisor மற்றும் Controller of Examinations உள்ளிட்ட பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு என மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் வேலை குறித்த அறிய விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.
JIPMER வேலைவாய்ப்பு:
தற்போது JIPMER பல்கலைக்கழகம் Senior Financial Advisor மற்றும் Controller of Examinations உள்ளிட்ட பணிகளுக்கு 2 காலியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது.Senior Financial Advisor பணிக்கு விண்ணப்பிப்போர் level -12 of the pay matrix (Grade Pay ரூ.7600) என்ற ஊதியதிற்கு சமமான பணிகளில் 5 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும். Controller of Examinations பணிக்கு விண்ணப்பிப்போர் அரசு சார்ந்த கல்லூரியில் ஏதேனும் பாடப்பிரிவில் மாஸ்டர் டிகிரி பெற்றிக்க வேண்டும்.
மேலும் Controller of Examinations பணிக்கு Pay level – 12 மாத ஊதியமாகவும் , Senior Financial Advisor பணிக்கு Py level -13 மாத ஊதியமாகவும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 58 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.Senior Financial Advisor மற்றும் Controller of Examinations பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Deputation முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் தகுந்த சான்றிதழ்களுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20/03/2023 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் விவரங்களை அறிய அதிகாரபூர்வ தளத்தை பார்வையிடவும்.