தற்போது South Indian Bank நிறுவனம், Marketing for MSME & NRI Business, Social Media, Search Engine Optimisation ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பணி குறித்த கூடுதல் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
South Indian Bank வேலைவாய்ப்பு:
South Indian Bank வெளியிட்டுள்ள அறிவிப்பில், Marketing for MSME & NRI Business, Social Media, Search Engine Optimisation உள்ளிட்ட பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பணியினை பொறுத்து அதிகபட்சம் 35 மற்றும் 45 ஆக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் MBA அல்லது B.Tech பட்டப்படிப்புகளில் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் மற்றும் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.10.23 லட்சம் முதல் ரூ.13.10 லட்சம் வரை ஆண்டு ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
South Indian Bank நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் Shortlisting Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்கும் நபர்களிடம் இருந்து விண்ணப்ப படிவ கட்டணமாக ரூ.100/- வசூலிக்கப்படும் மற்றும் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் www.southindianbank.com என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலம் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.