இந்திய காபி போர்டு நிறுவனம், Young Professional (YP ) பணிக்கு காலியிடங்கள் உள்ளதால் அதை நிரப்புவது குறித்து அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
காபி போர்டு வேலைவாய்ப்பு:
தற்போது Young Professional(YP) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Graduate Degree in Life Science அல்லது diploma in Computer Application பட்டப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டவருக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Young Professional பணிக்கு தகுதியுடைய நபர்கள் Personal Interview மற்றும் Academic Performance மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20/02/2023 என்ற தேதிக்குள் விரைந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகின்றனர்.