பிரசார் பாரதி ஆணையம், தற்போது Consultant, Senior Associate பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறவும். மேலும் பணி குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பிரசார் பாரதி வேலைவாய்ப்பு:
பிரசார் பாரதி ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Consultant, Senior Associate பணிகளுக்கென்று ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 62 க்குள் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் Graduate பட்டம் முடித்திருக்க வேண்டும் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்புகளில் 7வது CPC இன் படி நிலை 8 அளவிலான ஊதியம் பெற்று ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Consultant பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விரைவாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.