இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி(SIDBI) தற்போது Chief Technical Advisor (CTA), Deputy Chief Technology Officer, Chief Human Resource Officer உள்ளிட்ட பல பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கென மொத்தம் 19 பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SIDBI வேலைவாய்ப்பு:
SIDBI வங்கியில், Chief Technical Advisor (CTA), Deputy Chief Technology Officer, Chief Human Resource Officer, Legal Advisor cum General Counsel, Deputy Legal Advisor cum General Counsel, Legal Associate cum Counsel மற்றும் Consultant CA, Audit Consultant, Consultant CA, Economic Advisor, SIDBI Development Executive போன்ற பணிகளுக்கு மொத்தம் 19 காலியிடங்கள் உள்ளதாக SIDBI அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு பணியினை பொறுத்து அதிகபட்சம் 35,45,50 மற்றும் 55 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Bachelor’s Degree, Master’s Degree, Engineering Degree, Degree in law மற்றும் C.A, ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணி சார்ந்த துறையில் 3 முதல் 25 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
SIDBI வங்கி பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து recruitment@sidbi.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 12/02/2023 தேதிக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.