பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) , Junior Research Fellow (JRF) மற்றும் Project Assistant (PA) ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதால் அதை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் பல விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
DRDO வேலைவாய்ப்பு:
DRDO நிறுவனம் தற்போது Junior Research Fellow (JRF) பணிக்கு 2 பணியிடங்களும், Project Assistant (PA) பணிக்கு 1 பணியிடமும் என்று மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது அதிகபட்சம் 28 ஆக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் JRF பணிக்கு M.E, M.Tech அல்லது M.Sc போன்ற பட்டபடிப்புகளில் தேர்ச்சியும், PA பணிக்கு M.Sc. in Physics/ Chemistry/Material Science அல்லது B.E, B.Tech, M.E, M.Tech (Material Science/ Mechanical Engg./ Metallurgy) போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியம் JRF பணிக்கு ரூ.31,000/- மற்றும் PA பணிக்கு ரூ.18,000/- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
JRF மற்றும் PA பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 12/03/2023 தேதிக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.