தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் தற்போது Young Professional –I (Marketing) பணிக்கு இந்தியா முழுவதும் காலியிடங்கள் உள்ளதால் அதை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது.
NCDC வேலைவாய்ப்பு :
NCDC கழகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, Young Professional –I (Marketing) பணிக்கென்று இந்தியா முழுவதும் 51 காலியிடங்கள் உள்ளது என்றும், தமிழ்நாட்டில் 1 பணியிடம் மட்டுமே உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அதிகபட்சம் 35 வயது இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் மார்க்கெட்டிங் துறைகளில் MBA முடித்திருக்க வேண்டும் மற்றும் பணியில் 3 ஆண்டுகள் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் ரூ.50,000/- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Young Professionals பணிக்கு தகுதியுடைய நபர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.