CRPF ஆணையத்தில் Clinical Prosthetist and Orthotist பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக CRPF அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. எனவே பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக இறுதி நாள் முடியும் முன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது.
CRPF வேலைவாய்ப்பு:
CRPF ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Clinical Prosthetist and Orthotist பணிகளுக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 55 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Master in Prosthetics and Orthotics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்துடன் பிப்ரவரி 27 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.