ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL) தற்போது Assistant Engineer / Assistant Officer (Grade-I) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதால் அதை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் விரைவாக இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
HAL நிறுவன வேலைவாய்ப்பு:
தற்போது Assistant Engineer / Assistant Officer (Grade-I) பணிகளுக்கென்று உள்ள ஒரே ஒரு காலி இடத்தை நிரப்புவது குறித்து ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 28/02/2023 தேதியின் படி அதிகபட்சம் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் பணி சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் Bachelor’s Degree in Engineering அல்லது Technology முடித்திருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Engineer / Assistant Officer (Grade-I) பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட தகுதிகளை கொண்ட நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்கு 28/02/2023 என்ற தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.