சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (SECL) நிறுவனத்தில் தற்போது Mining Sirdar, Dy.Surveyor ஆகிய பணிகளுக்கு 400 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் அவ்விடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
SECL நிறுவன வேலைவாய்ப்பு:
SECL நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பில், Mining Sirdar, Dy, Surveyor பணிகளுக்கு 405 காலியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயதானது குறைந்தபட்சமாக 18 என்றும், அதிகபட்சமாக 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு , Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் இப்பணிகளுக்கென தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் ரூ.31852.56 /- அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
SECL நிறுவன வேலைக்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் நியமிக்கப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விரைவாக அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 23/02/2023 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.