அணுசக்தி பள்ளியின் வேலைவாய்ப்பு:
Preparatory Teachers, Primary Teachers, PRT, Trained graduate Teachers போன்ற பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அணுசக்தி மத்திய பள்ளி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயதானது பணியின் அடிப்படையில் அதிகபட்சம் 30 முதல் 35 க்குள் இருக்க வேண்டும் மற்றும் வயது வரம்பு தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் B.ED, Graduate, Bachelor Degree, Diploma பட்டப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.21,250/- முதல் ரூ.26,260/- வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Teachers பணிக்கு தகுதியுடையவர்கள் Skill Test / Written Test மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அலுவலக முகவரிக்கு தகுந்த ஆவணங்களுடன் 21/02/2023 என்ற தேதி முடிவதற்குள் தபால் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.