சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம், Consultant (Foreman mines), consultant (Blaster) பணிக்கென மூன்று இடங்கள் உள்ளதால் நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
CCI நிறுவன வேலைவாய்ப்பு:
CCI வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், Consultant (Foreman mines) பணிக்கு இரண்டு இடங்களும், consultant (Blaster) பணிக்கு ஒரு இடமும் என்று மூன்று பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்திருந்தது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது அதிகபட்சம் 63 ஆக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் மற்றும் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருத்தல் வேண்டும் என்று அறிவித்துள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணி வாரியாக மாத ஊதியம் ரூ.17,000/- மற்றும் ரூ.18,000/- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Consultant பணிக்கு தகுதியானவர்கள் Personal Interview மூலம் நியமிக்கப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் 20/02/2023 அன்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்று பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.