மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) ஒப்பந்த அடிப்படையில் Teachers, Ayahs மற்றும் Headmistress ஆகிய பணிகளின் காலியிடங்களை தற்காலிகமாக நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பை CRPF வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறவும்.
CRPF வேலைவாய்ப்பு:
CRPF ஆணையத்தில், Teachers, Ayahs மற்றும் Headmistress உள்ளிட்ட பணிகளுக்கு 11 காலியிடங்கள் உள்ளதாக CRPF அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் Headmistress (Female) பணிக்கு 1 இடமும், Teachers (Female) பணிக்கு 6 இடங்களும், Ayahs (Female) பணிக்கு 4 இடங்களும் என்று மொத்தம் 11 காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பானது பணியை பொறுத்து குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வரை இருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் பணி வாரியாக ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Graduate with Nursing Training Diploma முடித்திருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் பணியின் அடிப்படையில் குறைந்த பட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
CRPF ஆணையத்தின் பணிக்கு தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அலுவலக முகவரிக்கு 25/02/2023 என்ற தேதிக்குள் தபால் அனுப்பி விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.