இந்திய விளையாட்டு ஆணையம், Young Professional ( General ) பணிக்கென ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டும் இருப்பதால் அதை நிரப்ப வேண்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விரைவாக இறுதி தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறவும் அறிவுறுத்தப்படுகி
விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு:
இந்திய விளையாட்டு ஆணையம், தற்போது Young Professional ( General ) பணிக்கென்று ஒரே ஒரு பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 32 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Post-Graduation in any Discipline, BE, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணியில் குறைந்தது 1 ஆண்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
Young Professional பணிக்கு தகுதியுள்ள நபர்கள் உள்மதிப்பீட்டிற்கு பிறகு தகுதியின் அடிப்படையில் Online Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ncoelkorecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15/02/2023 என்ற தேதி முடிவதற்குள் அனுப்பி பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.