சென்னையில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியில் (KVB) Transaction Banking Group-ன் கீழ் உள்ள CMS Operations / SCF Operations / TREDS Operations போன்ற பதவிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பல்வேறு காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
KVB வங்கியின் வேலைவாய்ப்பு விவரங்கள் :
KVB வங்கியில் தற்போது காலியாக உள்ள CMS Operations / SCF Operations / TREDS Operations போன்ற பதவிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, மேலும் இந்த அறிவிப்பின் மூலம் KVB வங்கியில் ஒதுக்கப்பட்டுள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 31 வயதுக்கு மிகாமல் இருப்பவராக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் UG அல்லது PG டிகிரியில் 60% தேர்ச்சியும், 3 முதல் 5 வருட வங்கி சார்ந்த துறைகளில் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். மேலும் JAIIB/CAIIB போன்ற சான்றிதல்களை கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
KVB வங்கியால் நேர்காணல் நடத்தப்பட்டு இப்பணிக்கு பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் மேற்கண்ட தகுதிகளை பெற்ற நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் இறுதி நாளுக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.